Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடல் கொந்தளிப்பு அதிகரித்து காணப்படும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை

In இலங்கை
Published: 06:16 GMT, Dec 3, 2017 |
0 Comments
6896
icon_com
This post was written by : Risha

ஓஹி புயலின் தாக்கம் இலங்கையில் குறைவடைந்துள்ள போதிலும், கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, கடல் கொந்தளிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரித்துள்ளார்.

ஓஹி சூறாவளியானது தற்போது தெற்கு அராபிய கடல் அருகே லட்சத்தீவிற்கு மேலாக வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

இது இலங்கையைவிட்டு அப்பால் நகர்வதால் இந்த சூறாவளியின் தாக்கம் இலங்கையில் படிப்படியாகக் குறையும் எள எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)