Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க.வுடன் இணைவதா இல்லையா?- விரைவில் தீர்மானம் என்கிறார் மனோ

In இலங்கை
Updated: 06:52 GMT, Dec 3, 2017 | Published: 06:43 GMT, Dec 3, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Risha
mano

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்களுடனான சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுவில் இறுதி தீர்மானம் எட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”நமது வாக்காளர்கள் கணிசமாக வாழும் சபைகளைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய முன்னணியாக போட்டியிடுவதில் நமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவுகிறது.

ஏனென்றால் புதிய கலப்பு தேர்தல் முறையில் வட்டாரங்களில் மட்டுமல்லாமல், பட்டியலிலும் உறுப்பினர்களை பெறவேண்டியுள்ளது. ஆகவே நமது வாக்காளர்கள் கணிசமாக வாழும் சபைகளில் அனைத்து வட்டாரங்களிலும் நாம் போட்டியிடுவதன் மூலமே நாம் உரிய இலக்கை அடைய முடியும்.

இதனால் சில சபைகளில் சேர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியாகவும், சில சபைகளில் தனித்து முற்போக்கு கூட்டணியாகவும் போட்டியிட வேண்டும் என்ப­துவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)