Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலின பாகுபாடு, வன்முறைகளுக்கு எதிரான இந்தியரின் விழிப்புணர்வு பயணம்

In இந்தியா
Published: 06:54 GMT, Dec 3, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Elakkiya

பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இந்தியாவின் கிழக்கு பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராகேஸ் குமார் சிங் நேற்று (சனிக்கிழமை) வடக்கு லூதியானா நகரை வந்தடைந்துள்ளார்.

‘பாலின சுதந்திரத்திற்கான சவாரி’ என்ற ரீதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சைக்கிள் பயணத்தினை ஆரம்பித்த இவர் இதுவரை 18 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தை கடந்துள்ளார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேறுபட்ட நகரங்கள், கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்களுடன் இவர் கலந்துரையாடியுள்ளார்.

இவருடைய பயணம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி நிறைவடையும் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவில் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் கலாசாரமே காணப்படுவதுடன்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ராகேஸ் குமார் சிங் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg