Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊழலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

In உலகம்
Published: 06:27 GMT, Dec 3, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Suganthini

இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கையைக் கண்டித்து, அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான குழுவினரின் ஏற்பாட்டில், இஸ்ரேலின் ரெல் அவிவ் (Tel Aviv) பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, பிரதமர் அலுவலகத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவியல் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

பணம் படைத்த வர்த்தகர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ளுதல் உட்பட இவர் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமர் நெதன்யாஹு நிராகரித்துள்ள நிலையிலேயே, ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)