Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீகாந்த் மற்றும் சிந்துவுக்கு வாய்ப்பு! – இது திறமைக்கான அங்கீகாரம்

In விளையாட்டு
Published: 06:38 GMT, Dec 3, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Puvanes
pvsinthu001

டுபாயில் நடைபெறவுள்ள சுப்பர் சீரிஸ் பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் பங்குகொள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி.சிந்து ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் சுப்பர் சீரிஸ் பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின், இந்தஆண்டுக்கான இறுதிப்போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 13 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்தத்தொடரில் இந்தியாவின் முன்னணி பட்மிண்டன் வீரரான ஸ்ரீகாந்த், மற்றும் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கக் கூடிய சிந்து ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த வீரர்கள் மட்டுமே பங்குகொள்ளும் குறித்த சம்பியன்ஷிப் தொடருக்கு இந்தியத்தரப்பில் இருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை அவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என பாராட்டுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்றுள்ள சுப்பர் சீரிஸ் தொடரின் 12 போட்டிகளில் ஸ்ரீகாந்திற்கு 4 பட்டங்களும், பி.வி.சிந்துவுக்கு 2 பட்டங்களும் கிடைக்கப்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg