Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டுபாயில் இராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு- சடலத்தை ஒப்படைக்குமாறு உறவுகள் கோரிக்கை

In இந்தியா
Published: 07:19 GMT, Dec 3, 2017 |
0 Comments
1259
icon_com
This post was written by : Elakkiya

டுபாயில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர் கடல்சீற்றம் காரணமாக நடுக்கடலில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் மற்றும் சிறை வைப்புக்களால்  பெரிதும் இன்னல்களை எதிர்கொண்ட தமிழக மீனவர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக கேரளா, கன்னியாகுமரி பெங்களூர், அந்தமான் மற்றும் டுபாய் போன்ற இடங்களுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

இவ்வாறு, இராமேஸ்வரம் இராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த நம்பு குமார் என்ற மீனவர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் டுபாய்க்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். படகில் மீpன்பிடித்துக் கொண்டிருந்த போது கடல்சீற்றம் காரணமாக நம்புகுமார் படகில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்தார். சுமார் பத்து மணிநேர போராட்டத்தின் பின்னர் நம்புகுமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இவருடைய சடலம் டுபாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் நம்புகுமாரின் உடலை டுபாயிலிருந்து கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளிடம் கண்ணீருடன் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)