Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜாம்பவான் லாராவின் சாதனை முறியடிப்பு – புதிய சாதனையைப் படைத்தார் கோஹ்லி!

In கிாிக்கட்
Updated: 08:01 GMT, Dec 3, 2017 | Published: 07:05 GMT, Dec 3, 2017 |
0 Comments
3011
icon_com
This post was written by : Puvanes
virat002

இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட்கோஹ்லி இரட்டைச்சதம் அடித்து புதிய சாதனை ஒன்றினைப் படைத்துள்ளார்.

குறித்த டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் ஆரம்பமானது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை 4 விக்கெட்டுக்ள இழப்பிற்கு 371 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

அதன்படி களத்தில் கோஹ்லி 156 ஓட்டங்களுடனும், சர்மா 1 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர். தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

இதில் ஆரம்பம் முதலாகவே சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விராட் – சர்மா ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்தனர். இதில் 108ஆவது ஓவரில் கோஹ்லி 238 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டார்.

இதன்காரணமாக அதிகமுறை இரட்டைச்சதம் இடித்த டெஸ்ட் அணியின் தலைவர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் லாரா 5 தடவை இரட்டை சதம் பெற்றுக் கொண்டதே சாதனையாக காணப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg