Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யேமனின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு சவுதிக் கூட்டணி வரவேற்பு

In உலகம்
Updated: 07:07 GMT, Dec 3, 2017 | Published: 07:07 GMT, Dec 3, 2017 |
0 Comments
1399
This post was written by : Suganthini

யேமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ்வின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி வரவேற்றுள்ளது.

யேமனில் தாக்குதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென்று யேமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ் கூறியுள்ளார். இந்நிலையிலேயே, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி வரவேற்புத் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சிச் சேவையொன்றில் தோன்றி உரையாற்றிய சலேஹ், மோதலை நிறுத்தி, விமான நிலையங்களைத் திறக்க அயல் மாநிலங்களிலுள்ள சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், ‘யேமனில் இதுவரையில் இடம்பெற்றவை போதும். நாம் உரிய முறையில் பிரச்சினையை தீர்க்க முற்படுவோம் ‘ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த வாரம்வரை யேமனின் முன்னாள் ஜனாதிபதி சலேஹ்வின் கூட்டாளியாக இருந்த ஹுதி கிளர்ச்சியாளர்கள், ஆட்சிக்கவிழ்ப்புச் செய்கிறாரென்று அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறிருக்க, யேமனின் தலைநகரான சனாவில் படையினருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் மோதல் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg