Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள முதலமைச்சர்

In இந்தியா
Updated: 08:30 GMT, Dec 3, 2017 | Published: 08:29 GMT, Dec 3, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Elakkiya
201712030329008557_Kerala-government-has-decided-to-ask-the-Union-government-to_SECVPF

ஓஹி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஓஹி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றதால் கேரளாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓஹி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஓஹி புயலால் கேரளா மாநிலத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தயாரித்து வருகிறார். அந்த அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் கையளிக்கவுள்ளோம். எனவே, மத்திய அரசு ஓஹி புயல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்”  என வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg