Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை நஷ்டஈடு

In இலங்கை
Updated: 07:28 GMT, Dec 3, 2017 | Published: 07:28 GMT, Dec 3, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Risha
lore-1

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அதற்கமைய இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கையின் தென் கடற்கரைப் பிரதேசத்திலும் மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள், சொத்துகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை தற்போது பிரதமர் அலுவலகத்துக்கும் உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய தற்போது இப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கும்படி பிரதமர் வழங்கிய ஆலோசனைக்கேற்ப நிதி அமைச்சு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg