Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருவேளை உணவுக்கும் திண்டாட்டம்! – கடந்தகால துயரத்தை பகிர்ந்து கொண்டார் பாண்ட்யா

In கிாிக்கட்
Published: 07:33 GMT, Dec 3, 2017 |
0 Comments
1690
icon_com
This post was written by : Puvanes
pandya001

ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்பட்டவன் நான், தொடர்ந்தும் 3 வருடங்கள் உணவிற்கு கூட பணம் இல்லாத வாழ்க்கையை நடத்தியுள்ளேன் என இந்திய அணியின் இளம் நட்சத்திரவீரர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு அண்மையில் நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

10 ரூபாயினைப் பார்ப்பதற்கு கூட கடினமான வாழ்க்கையை நான் வாழ்ந்துள்ளேன். கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாது மறைந்து வாழவும் கூட நேர்ந்துள்ளது.

இப்படியான வாழ்க்கைக்கு பின்னரே 2015ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதில் 70 ஆயிரம் ரூபா ஊதியமாக கொடுத்தார்கள் அதுவே எமது பசியைப் போக்கியது. அந்தப் பணம் கொண்டே முதற்தடவையாக மூன்றுவேளை உணவினை உண்டோம்.

அந்த ஐ.பி.எல் போட்டியே என் வாழ்க்கையைத் திருப்பிப்போட்ட சம்பவமாகும். அதில் நான் விளையாடிய மும்பை அணி வெற்றி பெற்றதன் மூலம் எனக்கு 50 இலட்சங்களைக் கொடுத்தார்கள், புதிய காரும் கிடைத்தது என பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பாண்ட்யா தனது துன்பகரமான கடந்தகால வாழ்வினை முதற்தடவையாக பகிர்ந்து கொண்ட விடயமானது பலராலும் வியப்பாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)