Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டயர் தொழிற்சாலைக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் விஜயம்

In உலகம்
Published: 07:53 GMT, Dec 3, 2017 |
0 Comments
1584
icon_com
This post was written by : Suganthini

அண்மையில் வடகொரியா ஏவுகணைச் சோதனையை நடத்தியிருந்த நிலையில், அவ் ஏவுகணையை தாங்கிச்சென்ற வாகனத்துக்கு டயர்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் விஜயம் செய்துள்ளார்.

அம்னோகாங் (Amnokgang) எனும் டயர் தொழிற்சாலைக்கு எதிர்பாராத விதமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து, தொழிற்சாலையின் செயற்பாடுகளை அவர்  கண்காணித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலையை சுற்றிப் பார்வையிட்டுள்ள கிம் ஜொங் உன், ஊழியர்களுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும்,  அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய வகையான ஹ்வாசாங் -15  (Hwasong-15 ) எனும் ஏவுகணைச் சோதனையை கடந்த 29ஆம் திகதி வடகொரியா நடத்தியிருந்தது. இந்த ஏவுகணையைச் தாங்கிச்சென்ற வாகனத்துக்குரிய டயர்கள் இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, இந்தத் தொழிற்சாலைக்கு கிம் ஜொங் உன்னின்  விஜயம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)