Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிடம் 450 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

In கிாிக்கட்
Published: 08:08 GMT, Dec 3, 2017 |
0 Comments
1775
icon_com
This post was written by : Puvanes
india001

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 450 கோடி ரூபா இழப்பீட்டுத்தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2013ஆம் ஆண்டு ஜனவரி ஆகிய காலப்பகுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொண்டன.

அதன் பின்னர் குறித்த இருநாடுகளுக்கும் இடையில் தனித்தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை மற்றும் ரி20 உலக கிண்ணம் ஆகியவற்றிலேயே இருநாடுகளும் மோதிக்கொண்டன.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமானது, 2014ஆம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியத்துடன் ஒப்பந்தம் ஒன்றினைக் கைச்சாத்திட்டுக்கொண்டது. அதில் 2015 தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இரு அணிகளும் குறைந்தபட்சம் 6 ஒருநாள் தொடர்களில் தமக்கிடையே மோதிக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்திய கிரிக்கெட் வாரியமானது இன்றுவரையிலும் அந்த ஒப்பந்தத்தை பின்பற்றாமல் இருப்பதாகவும், இதன் பின்னணியில் அரசியல் இலாபங்கள் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையிலேயே இது தொடர்பில் முறையான விளக்கத்தினை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கவேண்டும் எனக் கோரியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,  450 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவித்துள்ளது.

அவ்வாறு இழப்பீடு வழங்கப்படாவிட்டால் விரைவில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg