Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிபந்தனைகளுக்கு இணங்காவிடின், பிரெக்சிற்றுக்கு தீர்வில்லை

In
Published: 08:32 GMT, Dec 3, 2017 |
0 Comments
1281
icon_com
This post was written by : Suganthini
may

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு பிரித்தானியா இணங்காவிடின், பிரித்தானியாவின் விவகாரத்துச் சட்டமூலத்துக்கு தீர்வு காண முடியாதென, பிரெக்சிற் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயிடமே, அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடும் நோக்கில், மேலதிக கூட்டங்களை அடுத்த வாரம் நடத்த பிரதமர் தெரேசா மே எதிர்பார்த்துள்ளார்.

மேலும், பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக எதிர்கால வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க பிரித்தானியா எதிர்பார்த்துள்ளது. இருப்பினும், நிதிச்சலுகை மற்றும் அயர்லாந்து எல்லை விவகாரம் உள்ளிட்டவற்றில் போதியளவான சிறந்த யோசனைகளை பிரித்தானியா முன்வைக்க வேண்டுமெனவும், அவ்வாறு சிறந்த யோசனைகள் முன்வைக்கப்படும் பட்சத்திலேயே, எதிர்கால வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியுமென்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg