Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்: தம்பிதுரை

In இந்தியா
Updated: 08:53 GMT, Dec 3, 2017 | Published: 08:52 GMT, Dec 3, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Elakkiya
thambidurai

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் வஞ்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதி மக்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று கலந்துரையாடிய தம்பிதுரை அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ? அவர்களே வெற்றி பெறுவார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் தெரியாத வீடே கிடையாது. எனவே அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க.வில் அணிகள் என்பது கிடையாது.

இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிக் கொடியை பயன்படுத்தும் அங்கீகாரத்தினை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையகம் வழங்கியுள்ளது. இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ? அங்கு வருவார்கள். கட்சியை மீறி செயல்படமாட்டார்கள். தமிழ் உணர்வையும், தமிழ் உரிமைகளையும் காக்கும் இந்த திராவிட இயக்கத்தை காப்பதே எங்கள் முதல் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg