Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுற்று நிருபத்திற்கு முரணாக நியமனம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

In இலங்கை
Published: 08:51 GMT, Dec 3, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Ravivarman
AC. Abdul Azees

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அந்த ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் முறைகேடான நியமனங்களை வழங்கியுள்ளதாகவும் இதற்கு நியாயம் பெற்றுத் தருமாறும் கோரி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் 1749 பேர் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பட்டதாரிகளின் முறைப்பாடு குறித்து தாம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரியிருக்கின்றேன்.

குறித்த முறைப்பாட்டில், ‘ஏற்கெனவே அரச சேவையிலுள்ளவர்கள் புதிய ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் அந்த சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் ஏற்கெனவே அரச சேவையிலுள்ளவர்கள் புதிய ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

இது வேலையற்ற நிலையில் பரீட்சையில் சித்திடைந்து வேலை வாய்ப்பை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருக்காத புதிய விடயமாக கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆசிரியர் தேர்வுக்காக வேறுவேறான வெட்டுப் புள்ளிகளும், அதேவேளை ஒவ்வொரு பாடத்திற்குமாக வேறுவேறு வெட்டுப் புள்ளிகளும் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவும் வெளிப்படையாகக் கூறப்படாது முறைகேடாகத் தீர்மானிக்கப்பட்ட மறைமுக அநீதியாகும். மேலும், ஆளணி வெற்றிடங்கள் வெளிப்படையதாகத் தெரிவிக்கப்படாது மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் விடயதானத்திற்குப் பொருத்தமில்லாத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். உதாரணமாக பொருளியல்துறை விஷேட பட்டதாரிக்கு தமிழ் இலக்கிய பாடவிதானம் வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று பொருத்தமில்லாத பாடவிதானங்களுடனும் குளறுபடியான விதத்திலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே இவற்றையெல்லாம் சீர் செய்து நியமனம் வழங்காது அநீதி இழைக்கப்பட்ட 1749 பட்டதாரிகளுக்கும் நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்’ என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என ஏ.சி.அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார்.

Complainant Graduate representative A

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)