Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வுக்கே ஆதரவு : வைகோ

In இந்தியா
Updated: 09:08 GMT, Dec 3, 2017 | Published: 09:06 GMT, Dec 3, 2017 |
0 Comments
1389
This post was written by : Elakkiya

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ம.தி.மு.கவின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கும் உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் மத்திய அரசை தட்டிக்கேட்க முடியாத அரசாகவே அ.தி.மு.க. இருப்பதாகவும் நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் பாரப்பரியத்தை காக்க வேண்டிய கடமை இருப்பதாலும் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து ஒருமித்த கருத்தோடு திமுக வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது, மதிமுகவும் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg