Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயல் பாதிப்பு- நாளை கன்னியாகுமரி செல்கிறார் நிர்மலா சீதாராமன்

In இந்தியா
Updated: 09:34 GMT, Dec 3, 2017 | Published: 09:33 GMT, Dec 3, 2017 |
0 Comments
1291
This post was written by : Elakkiya

ஓஹி புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி செல்கிறார்.

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ‘ஓஹி’ புயல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதுடன் மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியது. போக்குவரத்துக்களும் முடங்கிப் போயின.

தற்போது நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ள நிலையில், புயல்-மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடலுக்கு சென்ற மீனவர்கள் பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகளை பார்வையிடவும், நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை கன்னியாகுமரி செல்லவுள்ளதாக தமிழக வருவாய் துறை இணை ஆணையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg