Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் பிரித்தானிய விஜயத்துக்கு எதிர்ப்பு

In
Updated: 09:17 GMT, Dec 3, 2017 | Published: 09:17 GMT, Dec 3, 2017 |
0 Comments
1336
This post was written by : Suganthini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யுமாறு, பிரித்தானியா அரசாங்கம் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்தார். இருப்பினும், இவரது விஜயம் பற்றிய திகதி மற்றும் மேலதிக விபரங்கள் எதுவும் விடுக்கப்படவில்லை.

பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் செய்தால், மில்லியன் கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராடுவார்களென, ஈவினிங் தரநிலைக் குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்  பிரித்தானிய விஜயத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமானது, நாட்டில் இதுவரையில் கண்டிராத வகையில் மிகப்பெரியதாக இருக்குமென்று பிரித்தானிய அரசாங்கமும் நன்கறிந்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அமைப்பினர் இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த 3 வீடியோக் காட்சிகளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவீட்டரில் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இவரது இச்செயற்பாடு தவறானதென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையிலேயே, இவரது விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg