Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சுப்பர் லீக் – கவுகாத்தியிடம் வீழ்ந்தது டெல்லி டைனமோஸ்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:22 GMT, Dec 3, 2017 | Published: 09:22 GMT, Dec 3, 2017 |
0 Comments
1100
This post was written by : Puvanes

நான்காவது இந்தியன் சுப்பர் லீக் கால்பந்துச் சுற்றுப்போட்டித்தொடரின் 14ஆவது போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தி, கவுகாத்தி யுனைட்டட் எப்.சி அணி வெற்றிபெற்றுள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த குறித்த போட்டியில், ஆரம்பம் முதலாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுகாத்தி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியுடன் கவுகாத்தி அணி தொடரில் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதேசமயம் டெல்லி அணியிக்கு இது 2ஆவது தோல்வியாகும்.

இதேவேளை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனேயில் எப்.வி புனே அணியுடன், சென்னை எப்.சி அணி பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது. அதேசமயம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், மும்பை சிட்டி அணியும் மற்றுமொரு போட்டியில் களம் காணவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg