Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: மேலும் இரு வர்த்தமானி அறிவித்தல்கள்

In இலங்கை
Updated: 09:25 GMT, Dec 3, 2017 | Published: 09:25 GMT, Dec 3, 2017 |
0 Comments
1183
This post was written by : Risha

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் முன்வைக்கப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை மற்றும் எல்லை நிர்ணய ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பவற்றை மையமாகக் கொண்டே இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகவுள்ளன.

தேர்தலை நடத்துவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டே குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள், ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஆகியோரால் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg