Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

50 நிலையங்களை மூட தோமஸ் குக் நிறுவனம் முடிவு

In வணிகம்
Updated: 09:58 GMT, Dec 3, 2017 | Published: 09:58 GMT, Dec 3, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Risha
thomas

பிரித்தானியாவின் தமது சேவை வலைப்பின்னல்களை மதிப்பீடு செய்யும் வகையில், அங்குள்ள 50 நிலையங்களை மூட தோமஸ் குக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவில் தோமஸ் குக்கின் 690 நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 50 நிலையங்கள் மூடப்படவுள்ளன.

குறித்த நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் முன்னெடுக்கப்படும் எனவும், இதன் எதிரொலியாக 400 பேர்வரை வேலையிழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பாதிக்கப்படுவோருக்கான மாற்று திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தோமஸ் குக் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தோமஸ் குக் நிறுவனமானது, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பிரித்தானிய உலகளாவிய பயண நிறுவனமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg