Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையுடன் வென்றால் இந்தியா சாதனைப்பட்டியலில் இடம்பிடிக்கும்!

In கிாிக்கட்
Updated: 09:49 GMT, Dec 3, 2017 | Published: 09:49 GMT, Dec 3, 2017 |
0 Comments
2846
This post was written by : Puvanes

இந்திய அணி இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிக்கொள்ளுமாயின் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடரினை வென்ற அணிகள் வரிசையில் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை கைப்பற்றிய அணிகளாக அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதலிடத்தில் காணப்படுகின்றன.

இங்கிலாந்து அணியானது 1884ஆம் ஆண்டு முதல் 1892ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோல அவுஸ்ரேலிய அணி 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து 9 தொடர்களை வெற்றியீட்டியிருந்தது. அதன்படி குறித்த அணிகள் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய பட்டியலில் முதல் இடத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இந்தநிலையில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியஅணி தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை இதுவரை கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான தொடரில் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்றுள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லுமானால் தொடரைக் கைப்பற்றி இந்த சாதனைப்பட்டியலில் இணைந்து கொள்ளும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg