Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் சிம்புவால் எனக்கு பெரும் நட்டம் : மைக்கேல் ராயப்பன்

In சினிமா
Published: 10:03 GMT, Dec 3, 2017 |
0 Comments
10786
icon_com
This post was written by : Surenth

நடிகர் சிம்புவின் செயற்பாட்டால் தானும் தன்னுடைய குடும்பமும் நடுத்தெருவிற்கு வந்துள்ளது எனவும் சிம்புவின் செயற்பாட்டால் தான் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்ட சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் திகதிகள் வழங்கவில்லை.

திரைப்படத்தின் கதைப்படி முழுமையான எடுக்க விடவில்லை. பாதி திரைப்படம் நடித்தபோது இரண்டு பாகமாக திரைப்படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ஆம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்று கூறினார்.

அத்துடன் சிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த முறைப்பாடு கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் ஒரு மாதம் கடந்து விட்ட போதிலும் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்  குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)