Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா அபாரத்துடுப்பாட்டம்! – களத்தில் திணறும் இலங்கை

In கிாிக்கட்
Published: 10:16 GMT, Dec 3, 2017 |
0 Comments
1535
This post was written by : Puvanes
sri001

இலங்கை இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 537 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

குறித்த இரு அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளுக்கு, 371 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது.

களத்தில் 156 ஓட்டங்களைப்பெற்று கோஹ்லியும், 1 ஓட்டத்தினைப் பெற்ற நிலையில் ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்காது இருந்தனர். இந்தநிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. இதில் கோஹ்லி, சர்மா இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களை நிலைதடுமாறச் செய்தது.

தொடர்ந்து சர்மா 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஷ்வின் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். விராட் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 243 ஓட்டங்களைக் குவித்து அட்டமிழந்தார். அதன்டிடி 536 ஓட்டங்களைப் பெற்றிருந்தநிலையில் இந்திய அணி தன் ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றனர். அதன்படி 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg