Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக மீனவர்கள் 28 பேர் கேரள கடல்பகுதியில் மீட்பு

In இந்தியா
Updated: 10:38 GMT, Dec 3, 2017 | Published: 10:37 GMT, Dec 3, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Elakkiya
kerala

ஓஹி சுறாவளியின் தாக்கத்தினால் கடலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த தமிழக மீனவர்கள் 28 பேர் கேரள கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கன்னூர் பகுதியில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 13 மீனவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கொல்லம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த தமிழக மீனவர்கள் 71 பேர் உட்பட 357 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சு டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஓஹி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் திசைமாறி காணாமல் போயிருந்த நிலையில் சிலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளை மகராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 952 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg