Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் செய்ய வேண்டியவை!

In
Updated: 11:16 GMT, Dec 3, 2017 | Published: 11:04 GMT, Dec 3, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Risha
computer-user

கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் பலரும் தற்போது கணினியுடனேயே அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

எனவே இதனை தவிர்த்துக் கொள்வதற்கு கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு சில குறிப்புகள் இதோ,
இதனால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க கணினித் திரையை சற்று கீழ்நோக்கித் தாழ்வாக வைக்க வேண்டும். கணினித் திரையின் நடுப்பகுதி, நம் கண்களின் நேர் பார்வையில் இருந்து சற்றுக் கீழாக இருக்க வேண்டும். நேருக்கு நேர் கண்களில் படக் கூடாது.

கணினித் திரை தட்டையாக இருப்பது நல்லது. சாதாரணமாக உங்களால் பார்க்க முடியும் எழுத்தைவிட 3 மடங்கு பெரிய எழுத்தைத்தான் கணினி திரையில் நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

கணினித் திரையின் பிரகாசம் கண்களை உறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மானிட்டரில் இருந்து கண்கள் குறைந்தபட்சம் 20 அங்குல தூரம் தாண்டி இருக்க வேண்டும்.

கண் இமைகளை தேவையான அளவுக்கு சிமிட்டாத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்பட்டுவிடுகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக கணினியை விட்டு எழுந்து சிறிதுதூரம் நடந்துவிட்டு வர வேண்டும்.

தலைக்குமேல் இருந்துவரும் ஒளியோ, ஜன்னலில் இருந்துவரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாகப் படக்கூடாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)