Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு!

In இலங்கை
Updated: 16:39 GMT, Dec 3, 2017 | Published: 11:23 GMT, Dec 3, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Ravivarman

நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், மஸ்கெலியா நல்ல தண்ணீர்ப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜெயபாலன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக செல்வமாணிக்கம் ஹொஸ்னி அனஸ்லிடாவிற்கும், அவருடன் சித்தி பெற்ற மேலும் எட்டு மாணவர்களுக்கும் மேற்படி கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கும் அவர்களது ஆசிரியருக்கும் தங்கப்பதக்கம், சான்றிதழ், நினைவுச் சின்னத்தினையும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இதன்போது கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC09573 DSC09554 DSC09543

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)