Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவிடம் சிக்கித் திணறும் இங்கிலாந்து!

In கிாிக்கட்
Published: 11:14 GMT, Dec 3, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Puvanes
australiya001

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 442 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

நேற்று ஆரம்பித்த குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்யவே, அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அதன்படி முதல்நாள் ஆட்ட நிறைவுவரை அவுஸ்ரேலியா 4 விக்கெட்டுகளுக்கு 209 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

வோர்னர் 47 ஓட்டங்களையும், கவாஜா 53 ஓட்டங்களையும், ஸ்மித் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஹேண்ட்ஸ்காம்ப் 36 ஓட்டங்களும், ஷேன் மார்ஷ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் ஆரம்பித்த பின்னர் 36 ஓட்டங்களை பெற்றநிலையில் ஹேண்ட்ஸ்காம்ப் ஆட்டமிழந்து சென்றார். அதனைத் தொடர்ந்து வந்த பெய்ன் 57 ஓட்டங்களுக்கும், ஸ்டார்க் 6 ஓட்டங்களுக்கும் வெளியேறினர்.

எனினும் ஷேன் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி சதம் அடித்தார். கம்மின்ஸ் 44 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்துச் சென்றார்.

அதன்படி 442 ஓட்டங்களை பெற்றநிலையில் அவுஸ்ரேலியா ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து 29 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தநிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg