Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளரிக்கா கிச்சடி

In
Updated: 11:21 GMT, Dec 3, 2017 | Published: 11:21 GMT, Dec 3, 2017 |
0 Comments
1052
icon_com
This post was written by : Risha
download

தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய் (சிறிதாக நறுக்கியது) – 2 கோப்பை
  • தயிர் – 1 கோப்பை
  • துருவிய தேங்காய் – ½ கோப்பை
  • பச்சை மிளகாய் (சிறிதாக நறுக்கியது) – 3
  • சின்ன வெங்காயம் – 2
  • சீரகம் – ½ தேக்கரண்டி
  • கடுகு – ½ தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை
சிறிய வெங்காயம், சீரகம், துருவிய தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொடியாக்கிய கடுகினைச் சேர்த்து நன்றாக கலக்கவும். அதையே தனியோ வைத்துவிட்டு, இன்னொரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பாத்திரத்திலுள்ள நீர் முழுவதும் வற்றியதும் அரைத்து வைக்கப்பட்ட தேங்காய் விழுதினைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து கடுகு போட்டு தாளித்து கலவையோடு சேர்க்கவும். இந்தக் கலவை நன்கு ஆறிய பின்னர் அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg