Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிமடையில் பேரூந்து விபத்து: மூவர் படுகாயம்!

In இலங்கை
Published: 11:29 GMT, Dec 3, 2017 |
0 Comments
1046
icon_com
This post was written by : Ravivarman

பதுளை – வெலிமடை பிரதான வீதியின் வெலிமடை வெல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 03 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹியங்கனையிலிருந்து வெலிமடையில் நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு மீண்டும் மஹியங்கனை நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 03 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

vlcsnap-2017-12-03-16h20m50s139 vlcsnap-2017-12-03-16h20m37s237

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg