Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

In
Updated: 11:34 GMT, Dec 3, 2017 | Published: 11:33 GMT, Dec 3, 2017 |
0 Comments
1068
icon_com
This post was written by : Suganthini
jeab

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக மேலதிக ஒப்பந்தத்தில் கையொப்பமிட தீர்மானித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கர் மற்றும் பிரெக்சிற்றுக்கான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் ஆகியோர் சந்திக்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை, இவர்கள் இருவரும் பிரஸ்ஸல்ஸில் நாளை (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளனர். இதற்கு முன்னராக, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை, இவர்கள் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி கூறியுள்ளார்.

பிரித்தானியாவுடன் எதிர்கால வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முன்னர், 3 பிரதான பிரச்சினைகள் தொடர்பாக உடன்பாடு காணப்பட வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும், பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களின் உரிமைகள் தொடர்பாக பாரிய தடையை எதிர்நோக்கலாமெனவும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg