Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கும் விமான நிறுவனங்கள்

In கனடா
Updated: 12:24 GMT, Dec 3, 2017 | Published: 12:23 GMT, Dec 3, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Elakkiya
air

ஒவ்வொரு பயணிகளினதும் இருக்கை பதிவுகள் மற்றும் பயணக் கட்டணங்களில் மேலதிக கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் உலகளாவிய விமான நிறுவனங்கள் இந்த வருடம் 82 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டை விட 1.18 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுக் கொண்டுள்ள எயார் கனடா நிறுவனம் அதிக வருமானம் பெறும் உலகின் முதல் பத்து இடங்களில் உள்ள விமான நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

விமான வருமானங்களை கண்காணிக்கும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான IdeaWorks நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வு நிறுவனம் 138 விமான நிறுவனங்களை மறுபரிசீலனை செய்து அவற்றில் 66 விமான நிறுவனங்களில் ஆய்வு செய்து மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் எயார் கனடா நிறுவனம் முதல்முறையாக ஆய்வுக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுப் பட்டியலில் 6.2 பில்லியன் டொலர் வருமானத்துடன் அமெரிக்க விமான நிறுவனமே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)