Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவில் தீ: 5 சிறுவர்கள் உயிரிழப்பு

In
Published: 11:58 GMT, Dec 3, 2017 |
0 Comments
1048
icon_com
This post was written by : Suganthini

ரஷ்யா, நோவோஸ்பிர்ஸ்க் (Novosibirsk) பிராந்தியத்தின் ஸ்ரெப்னோய் (Stepnoy) கிராமத்திலுள்ள வீடொன்றில் திடீரெனத் தீ பரவியதில், சிறுவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் எரிகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி வீட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து தீ பரவியதாகவும், அவசரசேவைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி சிறுவர்கள் உயிரிழந்திருக்கலாமெனவும், அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கவனக்குறைவால் இடம்பெற்றதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg