Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலவு பூமியுடன் மோதும்! – அழிக்க காத்திருக்கும் அழகிய அரக்கன்

In அறிவியல்
Published: 12:07 GMT, Dec 3, 2017 |
0 Comments
3163
icon_com
This post was written by : Puvanes
moon001

நுண்ணியதோர் வடிவமைப்பு கொண்டு இயங்கிவரும் பிரபஞ்சமானது ஒரு விதிப்படியே இயங்கி வருகின்றது, எனினும் அந்த விதிகளில், இயக்கங்களில் மாற்றம் ஏற்படலாம் என்பது ஆய்வாளர்களின் வாதம்.

அதன்படி பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் ஒரு விண்கல் மோதியதால் டைனோசர் இனமே முற்றாக அழிந்தது. இதுபோன்ற ஆபத்துகள் மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் பூமிக்கு அதிகம் எனினும் அதனை துல்லியமாக கணித்துவிடமுடியாது.

அண்டவெளியில் சுற்றித்திரியும் கோடிக்கணக்கான விண்கற்கள், துணைக்கோள்கள் போன்றவற்றின் மூலம் பூமிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலேயே விண்வெளி ஆய்வுகளும் தொடருகின்றன.

அவ்வாறான ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டதே பிரபஞ்சவெளி அந்தரத்தில் பூமியோடு இணைந்து சுற்றிக்கொண்டிருக்கும் நிலவு ஒருகட்டத்தில் பூமியுடன் மோதலை நிகழ்த்தும் என்பதாகும். ஒருவகையில் நிலவு என்பது விஞ்ஞானிகளின் பார்வையில் அழகிய அரக்கனாகவே வர்ணிக்கப்படுகின்றது.

அண்டவெளியில் இருக்கும் நிலவு தற்போது ஆண்டுக்கு 4 சென்றிமீற்றர்கள் அளவில் பூமியை விட்டு விலகிச்சென்று கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு விலகிச்செல்லும் நிலவு இறுதியில் பூமியை நோக்கி பாய்ச்சலை நடத்தும் என ஜேசன் பர்ன்ஸ் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசை உந்துதலின் காரணமாக விலகிச் செல்லும் நிலவு, படிப்படியாக பூமியுடன் ஈர்க்கப்பட்டு பூமியோடு மோதும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்துவரும் ஜேசன் பர்ன்ஸ் “பூமி மற்றும் நிலவுடனான இறுதிகட்ட அலைபரிமான வளர்ச்சி அதாவது tidal evolution எனப்படுவது ஒருகாலகட்டத்தில் நிலவின் தூண்டுதலாக மாறுவதால் நிலவு பூமியுடன் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபகால ஆய்வு முடிவுகளின்படி பூமி, செவ்வாய் அளவிளான பாரிய கிரகத்துடன் மோதிய காரணத்தினாலே நிலவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இத்தகைய மோதல் அதி விரைவில் ஏற்பட்டுவிடாது எனக்கூறியுள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்தும் நிலவு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)