Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதம் நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும்: வியாழேந்திரன்!

In இலங்கை
Published: 13:00 GMT, Dec 3, 2017 |
0 Comments
1229
icon_com
This post was written by : Ravivarman

இனவாதம் என்பதும் மதவாதம் என்பதும் இந்த நாட்டில் இருந்து முழுமையாக களைந்தெறியப்படவேண்டும். அவ்வாறான தலைமைத்துவங்களை உருவாக்கவேண்டுமானால் அது சிறந்த கல்விமுறையூடாக மட்டுமே சாத்தியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலுத் தெரிவிக்கையில்,

“புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் பிள்ளைகள் அங்குள்ள வெள்ளையர்களைப் பின்தள்ளி பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துவருகின்றனர். வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனைச் சரியாகப் பயன்படுத்துகின்றார்கள்.

அங்கிருக்கின்ற கல்விமுறைகளை இங்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஒட்டுமொத்ததில் எமது கல்விமுறை மாற்றப்படவேண்டும். நாங்கள் கல்வியால் வளர்ந்த கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாவோம். தமிழர்களாகிய நாங்கள் கல்வியால் முழு இலங்கையையும் ஆண்டோம்.

இலங்கையில் சகல அரசாங்க துறைகளிலும் எமது தமிழர்கள் இருந்தார்கள். மீண்டும் நாம் கல்வியால் எமது இருப்பை நிலைநிறுத்த வேண்டும். கல்வியாலும் பொருளாதார வளர்ச்சியாலும் மட்டுமே ஒரு சமூகத்தின் இருப்பை ஒரு தேசத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். ஒரு பிள்ளையின் திறமை சரியானமுறையில் அடையாளப்படுத்தப்பட்டு அந்தத் துறையில் அவர் செல்ல அனுமதிக்கப்படுவாரானால் அவர் அதில் சாதனையாளராக மாற்றம்பெறுவார்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

DSC03119 DSC03091 DSC03063 DSC03047 DSC02927 DSC02702 DSC02668 DSC02664 DSC02643 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg