Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்!- பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

In இலங்கை
Updated: 12:20 GMT, Dec 3, 2017 | Published: 12:19 GMT, Dec 3, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Risha
160801084407_mahinda_512x288__nocredit

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அதனால் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் மூலமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மஹிந்த பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் பல இடங்களுக்கு சென்று பல்வேறு தரப்பினருடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

மஹிந்தவிற்கு அவரது அணியினருக்கும் அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலே, பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg