Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொய் சொல்லாதவர் யார்? – இது பொய்யின் உண்மை!

In அறிவியல்
Published: 12:35 GMT, Dec 3, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Puvanes
lie001

ஒவ்வோர் மனிதனும் சராசரியாக 10 நிமிடங்களுக்கு 3பொய்களைச் சொல்லுவார்கள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பொய் எனப்படுவது அறிவியலின் பார்வையில், சமூகமாக பூமியில் வாழும் ஓர் உயிரினமான மனிதன் பிறரிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளவும், இலாபத்திற்காகவும், ஆபத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவும் பொய் என்பதனைப் பயன்படுத்துகின்றான்.

இந்தப்பொய்யானது சிறுவயது முதலாகவே ஒவ்வோர் மனிதனும், தானாக அல்லது யாராவது மூலமாக கற்றுக்கொள்கின்றான். அதன்படி சிறுவயது முதலாக பொய்யை பேசவும், பொய்யைக் கண்டுபிடிக்கவும் மனிதன் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளான்.

ஒரு மனிதன் பிறந்து ஆறு மாதங்களிலேயே பொய்களுக்கு தன்னைப்பழக்கப்படுத்திக் கொள்கின்றான் என்பது ஆய்வாளர்கள் கூறும் வியப்பளிக்கும் உண்மை.

அதேபோல பொய் என்பது மனத மூளைக்கு கடினமானதோர் செயற்பாட்டாகும் இந்தப் பொய்யை பேசும் போது மன அழுத்தம், வியர்ப்பு, இதயத் துடிப்பு போன்றனவற்றின் மூலம் பொய் வெளிக்காட்டப்பட்டுவிடும்.

அதேபோல பள்ளிசெல்லும் ஒரு பிள்ளையானது அவர்களின் பெற்றோரிடம் பேசும் போது ஒவ்வோர் 5ஆவது வசனத்திலும் ஒரு பொய்யை வைத்தே உரையாடும் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அறிவியலூடாக பார்க்கும் போது சிறுவயது முதலாகவே பொய் மனதினின் மூளையிலும் விதைக்கப்பட்டுவிடுகின்றது. அது காலப்போக்கில் பல விதமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)