Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

In இலங்கை
Published: 12:39 GMT, Dec 3, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Risha
warning

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை, மேலும் 24 மணிநேரத்திற்கு நீடிக்க தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் மண்சரிவுகள், கற்பாறை சரிவுகள் மற்றும் மண்மேடு சரிந்து விழும் அபாயங்கள் காணப்படுவதால் அது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் அடையாளம் காணப்படும் படசத்தில், அப்பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg