Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்மார்ட்போன் தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கும்! – ஆய்வுத் தகவல்

In அறிவியல்
Updated: 12:54 GMT, Dec 3, 2017 | Published: 12:54 GMT, Dec 3, 2017 |
0 Comments
1263
This post was written by : Puvanes

ஸ்மார்ட்போன் மற்றும் ஏனைய மின்சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகரிக்கும் என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஸ்மார்ட்தொலைபேசி திரையை உயயோகிக்கும் நேரமானது மனச்சோர்வு, மற்றும் தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அனைத்துவகையான மனச்சோர்வுகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் பாவனை வழிசமைக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மின்சாதனங்களை அதிகம் பாவிப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தற்போது மனச்சோர்வு தற்கொலை எண்ணங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்க மின்சாதனங்களே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு இதன் தாக்கம் அதிகம் எனவும், மன அழுத்தம் காரணமான தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் சதவீதம் 58 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg