Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமுதாய அடிப்படை அமைப்புகள் பற்றிய செயலமர்வு!

In இலங்கை
Published: 16:18 GMT, Dec 3, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Ravivarman
4

மட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்களத்தின் சமுதாய அடிப்படை அமைப்புகள் பற்றியும் அமைப்புக்களை வலுப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையக அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்செயலமர்வு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள அனைத்து சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் பகுதி பகுதியாக நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஓரு பகுதியினருக்கான செயலமர்வு நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையகத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் பி. குணரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சமுர்த்தி திணைக்களத்தால் ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்ட சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், முகாமைத்துவப் பணிப்பாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினூடாக எதிர்வரும் காலங்களில் மக்களுக்கும், கிராமங்களுக்குமான அபிவிருத்திகளை மேலும் வினைத்திறன் மிக்க வகையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக வளவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், இதனுடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்பத்தை வலுப்படுத்துவதோடு, மேலும் அக்குடும்பத்தை, கல்வி, பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், கலாசாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் வலுவூட்டி அவர்களை உயர்த்துவதே நோக்கமாகும் எனவும் இதன்போது அங்கு உரையாற்றிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

5 3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)