Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த ஜனாதிபதி கோட்டாபயவே என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்யானவை!

In இலங்கை
Updated: 05:31 GMT, Dec 4, 2017 | Published: 02:47 GMT, Dec 4, 2017 |
0 Comments
1330
icon_com
This post was written by : Puvanes
gota001

அடுத்த ஜனாதிபதியாக வரப்போகின்றவர் யார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்மையில், 2020 ஆம் ஆண்டு இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுவதாக செய்திகள் வெளியாகின.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று கொழும்பு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டு இலங்கையின் தலைமைப்பீடம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் தாம் எந்தவித கருத்துக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர் கருத்துக்கணிப்புகளை வெளியிட உரிமை உண்டு எனினும் அதற்கு பல்கலைக்கழக பெயரினைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், இதன்மூலம் வாசகர்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)