Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத போராட்டங்களை தடுக்க பொலிஸ் மோப்பநாய்களுக்கு விஷேட பயிற்சி

In இலங்கை
Published: 04:20 GMT, Dec 4, 2017 |
0 Comments
1247
icon_com
This post was written by : Puvanes
dog001

எதிர்காலத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கலைப்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் பிரிவின் இரு விஷேட அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் போராட்டங்களைக் கலைப்பதற்கு கலகத்தடுப்புப் பிரிவு பொலிஸாருடன் இணைந்து செயற்பட பொலிஸ் மோப்பநாய்களுக்கு விஷேட பயிற்சிகளை வழங்கவுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், போராட்டங்களின்போது பொலிஸார் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டகாரர்களைக் கலைக்கவும் பொலிஸ் நாய்களுக்கு விஷேட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்திள் உள்ள மோப்ப நாய்களுக்கு சிறப்பான பயிற்சிகளை பொலிஸார் வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg