Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கனி மன்னிப்புக் கோரினார்

In உலகம்
Published: 04:48 GMT, Dec 4, 2017 |
0 Comments
1052
icon_com
This post was written by : Suganthini
afp

ஆப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி தொடர்பாகப் பேசிய கருத்துக்காக, அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கனி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசாங்கமென்று தங்களை அழைக்கும் குழுவுடன் தொடர்புள்ளதாக அரசாங்க அதிகாரிகள் சிலர் கூறிய கருத்துக்குப் பதிலளித்த அவர், இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டுமெனவும் அல்லது, பெண்களின் தலையில் அணியும் துணியையே அணிய வேண்டுமெனவும் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) கூறியிருந்தார்.

இவரது இந்தக் கருத்து பாலின ரீதியானதென்ற சர்ச்சையை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இதனையடுத்து, இந்தக் கருத்தால் கவலையடைந்த பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட அவர், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின்  உரிமைக்காக ஜனாதிபதி குரல் கொடுப்பதுடன், எமது நாட்டில் பெண்களுக்கான இடத்தைப் பாதுகாத்து உறுதிசெய்ய அவர் பணியாற்றி வருகின்றார்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சாடர் என்று ஜனாதிபதி பயன்படுத்திய வார்த்தைக்கு, ஆங்கிலத்தில் தலையில் அணியும் துணியெனப் பொருள்படுவது தான் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. சாதாரணமாகக் கூறப்பட்டவையே தவிர, நாட்டின் மிக முக்கிய இடத்திலுள்ள பெண்களை புண்படுத்தும் வகையில் கூறியவை அல்ல’ எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg