Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: ரஷ்ய குழு இலங்கை விஜயம்

In இலங்கை
Updated: 05:03 GMT, Dec 4, 2017 | Published: 05:03 GMT, Dec 4, 2017 |
0 Comments
2005
icon_com
This post was written by : Risha
news_10-03-2016_97coversubmarine

இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ரஷ்யாவின் ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படைக்கு விற்பனை செய்வது தொடர்பான 135 மில்லியன் டொலர் உடன்படிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

ரஷ்ய ஆயுத நிறுவனத்தின் தலைவரும் ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரோவிச் மிக்கீவ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் ஆகியோர் இவ்விஜயத்தில் ஈடுபடவுள்ளனர்.

தனிப்பட்ட ஜெட் விமானத்தில் இவர்கள் கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவர்களின் விஜயம் தொடர்பான உத்தியோகப்பூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை.

ரஷ்ய நிறுவனமானது, போர் வாகனங்கள், போர் பயிற்சி விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், படகுகள், நீர்மூழ்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பனவற்றை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg