Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: புனே அணியை பந்தாடியது சென்னை அணி

In உதைப்பந்தாட்டம்
Published: 05:27 GMT, Dec 4, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Anojkiyan
Hero ISL M11 - Pune v Mumbai

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 15வது லீக் போட்டியில், சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி புனே சிட்டி அணியை வீழ்த்தியது.

புனே நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமான விளையாடின.

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின், 2வது பாதியின் 52வது நிமிடத்தில் புனே அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை அதன் வீரர் ரஃபா லோபஸ் நூலிழையில் கோல் கம்பத்துக்கு வெளியே அனுப்பி வீணடித்தார். இதேபோல், போட்டியிக் 74வது நிமிடத்தில் சென்னையின் அருமையான கோல் வாய்ப்பையும் அவர் நூலிழையில் தடுத்தார்.

எனினும், கோல் இன்றி தொடர்ந்த இப்போட்டியின் 82வது நிமிடத்தில் சென்னை அணியின் தலைவர் ஹென்ரிக் செரீனோ, மிகத் துல்லியமாக தலையால் முட்டி கோல் அடித்து இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

போட்டியின் இறுதிவரை புனே அணியால் பதில் கோல் போடமுடியவில்லை இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இது சென்னை அணியின் இரண்டாவது வெற்றியாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg