Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் புதிய திறந்த நீதிமன்றத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டல்

In இலங்கை
Published: 05:20 GMT, Dec 4, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : JudeDanish

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காலை நாட்டிவைத்தார்.  சுமார் 242 மில்லியன் ரூபா செலவில் குறித்த நீதிமன்ற கட்டடத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

தற்போதைய நீதிமன்றக் கட்டடத்தொகுதி வளாகத்தில்  திறந்த நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டது. கட்டடத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒப்பத்தின் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை நிறுவனத்தால் இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசானந்தன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்த அபிமன்னசிங்கம், யாழ்யாப்பணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

IMG-3831
IMG-3828
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)