Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொண்டூராஸில் தேர்தல் முடிவுகளை மீள எண்ணும் நடவடிக்கை

In
Published: 05:34 GMT, Dec 4, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Suganthini
ele

மத்திய அமெரிக்காவின் ஹொண்டூராஸ் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளை மீள எண்ணும் நடவடிக்கையை, தேர்தல்கள் ஆணையகம் ஆரம்பித்துள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் 26ஆம் திகதி, ஹொண்டூராஸில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ஜுவான் ஒர்லண்டோ ஹெர்னான்டெஷ்  (Juan Orlando Hernandez)   மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சல்வடோர் நஸ்ரல்லா (Salvador Nasralla) ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், ஜுவான் ஒர்லண்டோ ஹெர்னான்டெஷ் 42.9 சதவீதமான வாக்குகளையும், சல்வடோர் நஸ்ரல்லா 41.4 சதவீதமான வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜுவான் ஒர்லண்டோ ஹெர்னான்டெஷ் வெற்றி பெற்றதாக தேர்தல் முடிவு வெளிக்காட்டியது.

இருப்பினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், கிட்டத்தட்ட 6 சதவீதமான வாக்குகள் வித்தியாசமே காணப்படுவதாகவும் எனவே, வாக்குகளை மீள எண்ண வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

அந்நாட்டில் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு வெளியாகியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வன்முறை வெடித்தது. இதன் காரணமாக 3 பேர் உயிரிழந்ததுடன், 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு இரவுவேளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஹொண்டூராஸில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், தேர்தல் முடிவுகளை மீள எண்ண வேண்டுமென்று அமெரிக்க அதிகாரிகளும்  வேண்டுகோள் விடுத்தததைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகளை மீள எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg