Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனிதாபிமான ரீதியிலான தஞ்ச கோரிக்கை நிராகரிப்பு: இலங்கையர்கள் நாடுகடத்தல்

In இலங்கை
Updated: 05:57 GMT, Dec 4, 2017 | Published: 05:57 GMT, Dec 4, 2017 |
0 Comments
1531
icon_com
This post was written by : Risha
dgdfgdyh

இலங்கையின் கடந்தகால யுத்தத்தை தொடர்ந்து கனடாவில் தஞ்சம் புகுந்திருந்த இலங்கையர்களின் நிரந்தர குடியுரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கனடாவின் மொன்றியல் பகுதியில் வசித்துவந்த தமிழ்க் குடும்பத்தினரே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையின் யுத்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றி வந்தவரது குடும்பத்தினர் கடந்த 2012ஆம் ஆண்டு கனடாவில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

அவர்கள் அங்கு நிரந்தர குடியுரிமை கோரியிருந்த நிலையில், அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தும் தீர்மானத்தை மீள பரிசீலிக்குமாறு அவர்கள் கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை மீள்திருத்தம் செய்யுமாறு கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடுகடத்தப்பட்ட குடும்பத் தலைவர் கூறுகையில், ”கனேடிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும், கனேடிய சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுகிறோம். கடந்த 5 வருடங்களாக கனடாவில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழந்தோம். நாம் இன்னமும் கனடாவை நேசிக்கின்றோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg