Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியின் முச்சதத்தை தடுத்துவிட்டனர்: இலங்கை வீரர்களை சாடும் சேவாக்

In கிாிக்கட்
Published: 07:18 GMT, Dec 4, 2017 |
0 Comments
1568
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy

போட்டியை நிறுத்திக் கொள்ளலாம் என கூறி நேரத்தை வீணடித்து முச்சதம் அடிக்கவிருந்த கோஹ்லியை, இலங்கை வீரர்கள் தடுத்துவிட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விராட் கோஹ்லி முச்சதம் அடிக்க கூடாது என்பதற்காகவே இலங்கை வீரர்கள் பல காரணங்களால் அவரை அடிக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இவர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றை (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டநேரத்தின் போது, மூச்சு விடவே சிரமப்பட்ட இலங்கை வீரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு விளையாடிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் 17 நிமிடம் தடைபட்டது.

127வது ஓவரை வீசிய லக்மல், 5வது பந்தை வீசி முடித்ததும் களத்தை விட்டு வெளியேறினார். சந்திமால், மெத்யூசுடன் கள நடுவர்கள் ஆலோசித்தனர். இலங்கை அணி மேலாளர் அசங்கா குருசின்கா, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உள்ளே வந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து விளையாடிய விராட் கோஹ்லி, 287 பந்துகளில் 243 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது முச்சத வாய்ப்பு பறிபோனது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)